இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட தொழிலாளி

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவுஎனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்
இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட தொழிலாளி
Published on

குளச்சல் :

இரணியல் அருகே கண்டன் விளை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-

எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு, 2-வது மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று எனது இளைய மகன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது குசவன்குழி பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவி, எனது மகனை வழிமறித்து மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள காலி கட்டிடத்திற்கு அழைத்து சென் றார். பின்னர் எனது மகனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.

இதையடுத்து எனது மகன் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். இந்த நிலையில் மீண்டும் எனது 2-வது மகன் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்தபோது வலுக்கட்டாயமாக ரவி அவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார். இதை பார்த்த எனது மூத்த மகன் ரவியை எச்சரித்தார். இதனால் எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி யிருந்தார். இதுதொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரவி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com