

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி விபத்து ஏற்படும் வகையில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்கின்றனர்.
விபத்துகளை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரா யணன் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 25 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன் உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக நேற்று 2003 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகரில் இன்று காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த வாகன சோதனையில் பெண்களும் சிக்கினார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.