கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன்.
கன்னியாகுமரி பகவதி அம்மன்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.

இந்த திருவிழா 12-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சி யாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து 1-ம்திரு விழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கி றது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந் தல் வாகனத்தில் எழுந்த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

3-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

4-ம்திருவிழாவான 6-ந் தேதி காலை 6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

5-ம் திருவிழாவான7-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

6-ம் திருவிழாவான8-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 9-ந்தேதி அதிகாலை5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் பிற்பகல்3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

8ம் திருவிழாவான 10-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் 8-30மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 

9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்துதேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 12-ந்தேதி  காலை 9 மணிக்கு  மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது. 

9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்ம னுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com