திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்க டாஜலபதி கோவிலில்தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் திரளான பக்தர்கள் தரிசனம்
Published on

நாகர்கோவில் : கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாஜலபதி கோவிலில், தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைதெ் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூலங்கி சேவை நடந்தது.அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை யும், அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு களை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜல பதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com