

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள மீராசா ஆண்டவர் முஸ்லீம்பள்ளிவாசல் நிர்வாகத்தை தமிழக அரசின் வக்பு வாரியம் நேற்று ஏற்றது.
கன்னியாகுமரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் என்கிற குத்பா தொழுகை பள்ளி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும், கன்னியா குமரிக்கு சுற்றுலா வருகின்ற சுற்றுலா பயணிகளும் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது வழக்கம்.தமிழக வக்பு வாரியத்திற்கு சொந்தமான இப்பள்ளிவாசலை "ஜாக்" என்கிற ஒரு அமைப்பு நிர்வாகம் செய்து வந்தது. அது மட்டுமின்றி முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்தவும்,
அவர்களின் வீடுகளில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யவும் இந்த அமைப்பு அனுமதி மறுத்து வந்தது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள முஸ்லிம்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தது. இது குறித்து இந்தப்பகுதி முஸ்லிம்கள் அரசுக்கும் வக்பு வாரியத்துக்கும் புகார்கள் அனுப்பி வந்தனர்.
விசாரணை மேற்கொ ண்ட வக்பு வாரியம், பள்ளிவாசல் நிர்வா கத்தை வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை வக்பு வாரிய உத்தரவை உறுதி செய்துபள்ளிவாசல் நிர்வாகத்தை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி வந்த வக்பு வாரிய கண்காணிப்பாளர் காதர் ஷெரீப் பள்ளி வாசல் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார்.
பள்ளிவாசல் ஆவ ணங்கள், பதிவேடுகள் மற்றும் பொருட்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி ராஜா தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.