கன்னியாகுமரி படகுத்துறையில் 2 வருடங்களாக முடங்கி கிடக்கும் அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரிக்கு பயன்படுத்த முடிவு

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வுதமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
கன்னியாகுமரி படகு துறையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
கன்னியாகுமரி படகு துறையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில்சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த2அதிநவீனபடகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுர்சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

இந்த 2அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலாப் பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன் பயனாக இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துஉள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா இன்று காலை கன்னியாகுமரி படகு துறையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி) கேப்டன் தியாகராஜன் (இயககம்) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி படகு துறைமுக மேலாளர் செல்லப்பா துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம்ஒன்றிய தி.மு.க. இளைஞர்அணி முன்னாள் அமைப்பாளர் சிவபெருமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com