கன்னியாகுமரி அருகே தான் ஓட்டி வந்த டெம்போவே டிரைவர் உயிரைப் பறித்த பரிதாபம்

டயருக்கு அடியில் வைத்த கல்லை எடுத்த போது மதில்சுவரில் மோதி உடல் நசுங்கியதுகன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி அருகே தான் ஓட்டி வந்த டெம்போவே டிரைவர் உயிரைப் பறித்த பரிதாபம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 43). டெம்போ டிரைவர்.

இவர்நேற்றுமாலை சுமார் 3மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் கட்டிடக் கழிவுகளை ஏற்றுவதற்காக தனது டெம்போவை ஓட்டி வந்தார். அங்கு அவர் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை சாலை ஓரமாக நிறுத்தி வைத்து இருந்தார். அவர் தனது டெம்போவை நிறுத்தி வைத்திருந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த டெம்போ நகராமல் இருப்பதற்காக டயருக்கு அடியில் டிரைவர் ஜேக்கப் கல்ஒன்றை தடுப்பு கொடுத்து வைத்து உள்ளார்.

லோடு ஏற்றிய பின்பு டயருக்கு அடியில் வைத்திருந்த கல்லை டிரைவர்ஜேக்கப் அகற்றினார். அப்போது டெம்போ "திடீர்" என்று நகர்ந்து ஜேக்கப்பை அருகில்உள்ள மதில் சுவருடன் சேர்த்து இடித்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேக்கப்பை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com