கோவில் உண்டியல் கொள்ளை

இரணியல் அருகே கோவில் உண்டியல் கொள்ளை செய்யப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தில் புகழ் பெற்ற அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.  இங்கு காலையும் மாலையும் இரு வேளை பூஜை நடைபெறும் மீனபரணி பௌர்ணமி அன்று இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு வருகின்றனர். 

இன்று காலை பூசாரி நடை திறக்க வரும் போது உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஊர் தலைவர் வேலுதாசுக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com