தக்கலை கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற மாணவி மாயம்

கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தக்கலை கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற மாணவி மாயம்
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கோழிப் போர்விளையை சேர்ந்தவர் விஜயலதா (வயது 48). இவரது 17-வயதான மகள் பிளஸ்-2 முடித்துவிட்டு தக்கலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் கம்ப்யூட்டர் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மார்த் தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com