ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம்

மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம்
Published on

நாகர்கோவில் :

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான கபடி பாேட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் டாக்டர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன் கலந்துகாெண்டு பரிசுகளை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பாெறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com