கன்னியாகுமரி அருகே கோவில், கடைகளில் கொள்ளையடித்த அண்ணன் -தம்பி கைது

கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தில் உள்ள சுடலை மாடசுவாமி கோவிலில் சமீபத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல கன்னியாகுமரி அருகே உள்ள கல்லுவிளையில் உள்ள ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது லீபுரத்தைச் சேர்ந்த பாலபிரசாத் (வயது 30) மற்றும் அவரது தம்பி விஷ்ணு பிரசாத் (20) என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்குமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com