கன்னியாகுமரியில் இன்று 3-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 2 மணி நேரம் தாமதம்காலை 10 மணிக்கு கடல்சகஜ நிலைக்கு திரும்பியது
கன்னியாகுமரியில் இன்று 3-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி கடலில் அமாவாசையை யொட்டி இன்று காலையில் 3-வதுநாளாக கன்னி யாகுமரியில்"திடீர்" என்று கடல்நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்த ளிப்பாகவும் காணப்படு கிறது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலை அமைந்து ள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்துகாணப்பட்டது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்க ப்படவில்லை. இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல்சகஜ நிலைக்கு திரும்பியது.

இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை10 மணிக்கு விவேகானந்தர்மண்ட பத்து க்கு படகு போக்கு வரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிக ள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில ்சென் றுஆர்வ முடன்பார்த்து வந்தனர்.

திருவள்ளுவர்சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி,சின்னமுட்டம்,வாவத்துறை, கோவ ளம், கீழமணக்குடி, மணக் குடிபோன்ற கட ற்கரை கிராம ங்களில்க டல்சீற்ற மாக காணப்ப ட்டது.

இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com