சொத்து பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது வழக்குபுதுக்கடை போலீசார் விசாரணை
சொத்து பிரச்சினையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே விழுந்தயம் பலம் பகுதி பனங்காலவிளையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் பொருட்களை வினியோகிக்கும் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். அருவை என்ற பகுதி, காட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டீபன் (67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று செந்தில்குமார் வீட்டருகில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு ஜார்ஜ் ஸ்டீபன் எரித்துள்ளார். இதனை செந்தில்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜார்ஜ் ஸ்டீபன் கையில் வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com