வலம்புரி விளை குப்பை கிடங்கில் மழையால் அணைந்த தீ

வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.நேற்று மதியம் நாகர்கோவிலில் கன மழை கொட்டி தீர்த்தது.
வலம்புரி விளை குப்பை கிடங்கில் மழையால் அணைந்த தீ
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.

இதையடுத்து நாகர் கோவில், கன்னியாகுமரி, திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

நேற்று மதியம் நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com