இரணியல் அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது.இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.
இரணியல் அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

நாகர்கோவில் : குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியரின் ஒப்புதல் பெற உள்ளதாக தனியார் நில உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் அமைக்க வி.ஏ.ஓ., தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒப்புதல் வழங்கக்கூடாது என கோரி அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர். செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com