சொத்து பிரச்சனை வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல்

சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுபுதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சொத்து பிரச்சனை வீடு புகுந்து வாலிபர் மீது தாக்குதல்
Published on

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே பைங்குளம் நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (50) என்பவருக்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவதினம் தாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது வீட்டில் அத்து மீறி நுழைந்த ராஜன், விஜயா (45) ஆகியோர் தாசை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த தாஸ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com