பொன்மனை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்புஅனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி உடனே அமைக்க வேண்டும்
பொன்மனை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

கன்னியாகுமரி :

பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக குளச்சவிளாகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செ யலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும், அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி உடனே அமைக்க வேண்டும், மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து கட்சி நிர்வாகிகளும் முழு மூச்சாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதைத்தொ டர்ந்து திற்பரப்பு, குலசேகரம், பேரூராட்சிகள் மற்றும் பேச்சிப்பாறை, சுருளோடு, அயக்கோடு ஆகிய ஊராட்சிகளிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ரெத்தி னகுமார், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், திற்பரப்பு பேரூ ராட்சி தலைவர் பொன்.ரவி, வட்டார பொருளாளர் ஜேம்ஸ்ராஜ், வட்டார துணை தலைவர் கமாருதீன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பினிஷ், திற்பரப்பு நகர தலைவர் எட்வின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com