மணவாளக்குறிச்சி அருகே பாலிடெக்னிக் மாணவர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிளில் தலை மோதியதால் உயிர் இழந்த சோகம்பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணவாளக்குறிச்சி அருகே பாலிடெக்னிக் மாணவர் விபத்தில் பலி
Published on

கன்னியாகுமரி :

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் புனித சவேரியார் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் ராஜ். கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சகாய அஜய் (வயது 22). வெள்ளமோடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2- ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று பிற்பகல் சகாய அஜய் தனது மோட்டார் சைக்கிளில் குளச்சல் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். மோட்டார் சைக்கிள் மண்டைக்காட்டை கடந்து கூட்டுமங்கலம் பகுதியில் செல்லும்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குளானது சகாய அஜய் சாலையில் உருண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சகாய அஜய் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் ஜூலியட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்து பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் கடியபட்டணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com