குளச்சல் அருகே கல் வீசி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - 4 பேர் மீது போலீசார் வழக்கு

குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.
குளச்சல் அருகே கல் வீசி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - 4 பேர் மீது போலீசார் வழக்கு
Published on

கன்னியாகுமரி : 

குளச்சல் சாஸ்தான்கரையை சேர்ந்தவர் குமரி மணிமாறன் (வயது 45).

சமூக ஆர்வலரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தன குமார், சதன்வி, சங்கர், அனீஸ் ஆகியோருக்குமிடையே வெள்ளியாக்குளம் கோவில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு குமரி மணிமாறன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.

தொடர்ந்து வெளியில் வந்த குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் 4 பேரும் கற்களை எடுத்து வீசியதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக குமரி மணிமாறன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com