தக்கலை அருகே விபத்தில் பிளம்பர் பரிதாப சாவு

தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநின்றிருந்த வாகனத்தை கவணிக்காமல் மோதி விபத்து
தக்கலை அருகே விபத்தில் பிளம்பர் பரிதாப சாவு
Published on

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஆசீர் மனு வேல் (வயது33), பிளம்பர். இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை.

கடந்த 11-ந் தேதி ஆசீர் மனுவேல் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றார். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அவர், முத்தளக்குறிச்சியில் வரும் போது கல்லுரி வாகனம் நின்றிருந்ததை கவனிக்கவில்லை.

இதனால் எதிர்பாராத விதமாக அந்த வாகனத்தின் பின்புறம் ஆசீர்மனுவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார்.அவரைஅருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் ஆசீர்மனுவேல் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று அதிகாலை ஆசீர்மனுவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக அவரது தாய் லில்லி பாய் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com