மேலகிருஷ்ணன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலி

108 ஆம்புலன்ஸ் மூல மாக சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிதலை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலி
Published on

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே மாதவலாயம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு உசேன் அகமது கான் (வயது 41), பிளம்பர்.

மோட்டார் சைக்கிள் மோதியது

இவர் தற்பொழுது பறக்கை பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாபு உசேன் அகமதுகான் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். சங்குத்துறை-மேல கிருஷ்ணன் புதூர் ரோட்டில் வந்து கொண்டி ருந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவ ரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பாபு உசேன் அகமது கான் தூக்கி வீசப்பட்டு படுகா யம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூல மாக சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தலை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த னர். எனினும் சிகிச்சை பலனின்றி பாபு உசேன் அகமதுகான் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மாமனார் முகமது ஜலால் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாபு உசேன் அகமது கான் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய பள்ளம் கோவில் தெருவை சேர்ந்த ஹஜித்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com