இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மனைவி செல்லதங்கம் (வயது 65). இவர் மகன் ஸ்ரீகுமார் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் செல்லத்தங்கம் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்திற்கு குளிக்க சென்றார்.‌ அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே இளைஞர்கள் செல்லதங்கம் உடலை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்லதங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com