குளச்சல் அருகே தொழிலாளி மர்ம சாவு

குளச்சல் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கோப்பு காட்சி.
கோப்பு காட்சி.
Published on

நாகர்கோவில்:

குளச்சல் அருகே பெத்தேல் புரம் பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் ஜாண்.இவரது மகன் ஜாஸ்பர்லால் (20).திங்கள்நகரில் ஒரு கார் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 6 உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒர்க் ஷாப் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜாஸ்பர்லால் வீட்டின் முன்பு படுத்து தூங்கினார்.நேற்று காலையில் பார்க்கும்போது அவர் வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது தந்தை மிக்கேல் ஜாண் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி? இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com