நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

டாக்டர் மீது போலீசார் வழக்குபெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
Published on

நாகர்கோவில், ஜூலை.6-

நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் ஒருவர் செயல்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று இவர் அலுவலக பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு டாக்டர் வந்துள்ளார். அவர், பெண் அலுவலர் இருந்த அறையை பூட்டிவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்ததால், டாக்டர் அவரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, பெண் அலுலவரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேசமணி நகர் போலீசார், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com