குலசேகரம் அருகே ஓணம் விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்

தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.
குலசேகரம் அருகே ஓணம் விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்
Published on

திருவட்டார் :

குலசேகரம் அருகே உள்ள மாஞ்சக்கோணம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்துரை. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகள் அனுசியா (வயது 19), திருவிதாங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படுவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அனுசியா தெரிவித்துள் ளார். இதற் காக புத்தாடை அணிந்து அவர் நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

மாலையில் மகள் வந்து விடுவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், அனுசியா வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அங்கு விழா முடிந்ததும் அனுசியா அங்கிருந்து சென்று விட்டதாக கூறி உள்ளனர்.

இதனை தொடர்ந்து தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அனுசியா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீசில் வேல்துரை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com