கோட்டார் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்

கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைஉடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
கோட்டார் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டாறு வைத்தியநாதபுரம் வட்ட விளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி.

இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.இதை யடுத்து சுரேஷை அவரது பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடினார்கள். ஆனால் சுரேஷ் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் சுரேஷ் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேஷ் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com