விஷபூச்சி கடித்ததால் வாலிபர் சாவு

நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏதோ விஷ பூச்சி கடித்துள்ளது.தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வினோத்
வினோத்
Published on

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள பாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது36), தொழிலாளி.இவர் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது ஏதோ விஷ பூச்சி கடித்துள்ளது. இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உடலில் வீக்கம் ஏற்பட்டதால் தாயாரிடம் கூறியுள்ளார்.

அவர், தக்கலை அரசு மருத்துவமனைக்கு வினோத்தை அழைத்துச் சென்றார்.அங்கு மயங்கி விழுந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வினோத் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com