தெங்கம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு சென்று வந்த வாலிபர் திடீர் சாவு

இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
தெங்கம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு சென்று வந்த வாலிபர் திடீர் சாவு
Published on

கன்னியாகுமரி:

தெங்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 34).

இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து விட்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்க சென்றார். இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

உடனே அவரது தந்தை ஜார்ஜ்மெய்யேல் ஒரு ஆட்டோவை பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அலெக்சாண்டரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜார்ஜ் மெய்யேல் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரின் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com