இரணியல் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

இரணியல் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாகர்கோவில்:

இரணியல் அருகே உள்ள காடேற்றி என்ற இடத்தை சேர்ந்த வர் அய்யப்பன் (வயது 55), கூலி தொழிலாளி. ஏதோ மனவருத்தம் காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார் ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு வாயில் நுரை தள்ளிய படி அய்யப்பன் மயங்கி கிடந்தார் இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  டாக்டர் கள் பரிசோதனை செய்து விட்டு அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவரது மனைவி லதா (45) அளித்த புகாரின் பேரில் இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com