இரணியல் அருகே மது பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை - சகோதரன் கைது

ஜேம்ஸ்ராஜாவும், சகாய செல்வனும் மாறி மாறி அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே மது பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை - சகோதரன் கைது
Published on

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவரது மகன்கள் ஜேம்ஸ்ராஜா (35), சகாய செல்வன் (33). கட்டிட தொழில் செய்து வந்த இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.

இவர்கள் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனர். கடந்த 9-ந் தேதி மாலை 2 பேரும் மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஜேம்ஸ்ராஜாவும், சகாய செல்வனும் மாறி மாறி அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆத்திர மடைந்த ஜேம்ஸ்ராஜா, அருகில் கிடந்த மது பாட்டி லை உடைத்து சகாய செல்வன் கழுத்தில் குத்தி னார். இதில் பலத்த காயமடைந்த சகாய செல்வ னை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சகாயசெல்வன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜேம்ஸ் ராஜா மீது பதியப்பட்டு இருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். ஜேம்ஸ் ராஜா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்டிலை உடைத்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com