பூதப்பாண்டி அருகே கரடி கடித்து தொழிலாளி படுகாயம்

தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே கரடி கடித்து தொழிலாளி படுகாயம்
Published on

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வெள்ளாந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52).

இவருக்கு அந்த பகுதியில் ரப்பர் தோட்டம் உள்ளது. தினமும் காலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக கிருஷ்ணன், தோட்டத்திற்கு செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக கரடி ஒன்று வந்தது. அதனை பார்த்ததும் கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவரை துரத்திச்சென்று கரடி கடித்தது. இதில் கிருஷ்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை தொடர்ந்து கரடி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. காயத்துடன் கிடந்த கிருஷ்ணன் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கரடி மீண்டும் தோட்டத்திற்கு வராத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com