கன்னியாகுமரியில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கேரள டிரைவர்

அழகான பெண்கள் இருப்பதாகவும் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் இருந்தது தெரியவந்தது.
கன்னியாகுமரியில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கேரள டிரைவர்
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன்பரப்பு கிராமத்தைச்சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒருவர், அவரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கினர். மேலும் குறிப்பிட்ட வீட்டிற்கு அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ராஜேஷ் (வயது 38) என்பதும் கேரள மாநிலம் திருவ னந்தபுரம் ஆனை நலவட்டம், கடைக்காவூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது.

இவர் சுவாமி நாதபுரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண் களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்ணை நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காப் பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com