கிளி வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் வீதி உலா

கன்னியாகுமரி கோவிலில் வைகாசி விசாக 2-ம் திருவிழாவையொட்டி கிளி வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா.வழி நெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
கிளி வாகனத்தில் கன்னியாகுமரி  பகவதி அம்மன் வீதி உலா
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது.

கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன்சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் அங்கிருந்து வாகன பவனி புற ப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகன த்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்க ணம்"சாத்தி வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.3-வது நாளான இன்று அதி காலை 5மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

அதைத் தொடர்ந்து 11-30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும்9மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com