கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்  நாளை தேரோட்டம்
Published on

கன்னியாகுமரி:

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாகபெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவருகிற12-ந்தேதிவரை10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை6மணிக்கு சமய உரையும் இரவு7மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

9-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்புநிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலை வர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

தேர் நிலைக்கு நின்ற தும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சி தர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்ட கப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை யும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com