வெள்ளிச்சந்தை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

பொதுமக்கள் திருடனை விரட்டினர்.அவர் தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
வெள்ளிச்சந்தை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

கன்னியாகுமரி:

வெள்ளிச்சந்தை அருகே புளியடியை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி ராணி (வயது 60).

இவர் சம்பவத்தன்று பேயோடு பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு காலை சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ராணி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தார். இதில் ராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே ராணி சத்தம் போட்டு அலறவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருடனை விரட்டி சென்றுள்ளனர். அவர்கள் விரட்டியதும் அவர் தனது மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பி யோடி விட்டார். பின்னர் இச் சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசிற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com