மார்த்தாண்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

குழித்துறை : 

மார்த்தாண்டம் முழங்குழி வாயக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். ஒர்க் ஷாப் உரிமை யாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 28). இவர் பி.எட். முடித்துவிட்டு திருவட்டாரில் உள்ள பள்ளிக்கு பயிற்சிக்காக சென்று வந்தார். நேற்று மாலை மார்த்தாண்டம் ெரயில்வே கிராசிங் அருகே உள்ள பல்லன்விளை பகுதியில் மகேஸ்வரி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி காயப்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com