நாகர். நாகராஜா திடலில் பாரதிய ஜனதா சார்பில் 2-ந்தேதி குமரி சங்கமம்

மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது.
நாகர். நாகராஜா திடலில் பாரதிய ஜனதா சார்பில் 2-ந்தேதி குமரி சங்கமம்
Published on

நாகர்கோவில் :

குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கடந்த 4-ந்தேதி நடைபெற இருந்த குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ள இருந்தார். ஆனால் கடந்த 3-ந்தேதி ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை சோகத்தில் ஆழ்ந்ததால் நாகராஜா கோவில் திடலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட குமரி சங்கமம் நிகழ்ச்சி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மீனாதேவ், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். எனவே நிகழ்ச்சியில் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com