மது குடித்து ஊதாரித்தனமாக சுற்றியதால் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்றேன்

சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்சொத்து விவகாரத்தில் மோதல்
மது குடித்து ஊதாரித்தனமாக சுற்றியதால் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்றேன்
Published on

கன்னியாகுமரி:

திங்கள்சந்தை அருகே உள்ள சரல்விளையைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி யன் (வயது 80). இவருக்கு 5 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

இவரது மகன்களில் ஒரு வரான நாகராஜன் (40) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து உள்ளார்.

நேற்றும் அவர் தகராறில் ஈடுபடவே ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் கோடா ரியால் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திங்கள் சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்ற மகனையே கொலை செய்த சவுந்தர பாண்டியன் இரணியல் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் திருமண மாகாமல் இருந்த நிலையில், எனது பெயரில் இருந்த 8 செண்ட் நிலத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். ஆனால் அவன் அடிக்கடி மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தான். இதனால் அவன் மீது நம்பிக்கை இழந்தேன்.

இதனால் 8 செண்ட் நிலத்தை மீண்டும் எனது பெயருக்கே மாற்ற திட்ட மிட்டேன். இதுபற்றி நாகராஜ னிடம் பேசிய போது அவன் மறுப்பு தெரிவித்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று வீட்டுக்கு வந்த அவனிடம் மீண்டும் சொத்து பிரச்சினை குறித்து பேசி னேன். ஆனால் அவன் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசினான். பின்னர் அவன் வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டான். ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனவே வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துச் சென்று, மகன் என்றும் பாராமல் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொன்றேன். பின்னர் போலீசில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com