

நாகர்கோவில்:
கோட்டார் இளங்கடை வேதநகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்மான் யூசுப் (வயது 27). இவர் பெருவிளையில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார்.நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்களை எதுவும் திருடப்படவில்லை. ஆனால் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து திருட முயன்றிருந்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.