தக்கலை அருகே அரசு பஸ் டிரைவருக்கு அடி-உதை

குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றதுஅரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தக்கலை அருகே அரசு பஸ் டிரைவருக்கு அடி-உதை
Published on

கன்னியாகுமரி :

குழித்துறை அருகே பாகோடு ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் அஜில் குமார் (வயது 37). மார்த்தாண்டம் டெப்போவில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வரும்போது தக்கலை அருகே கல்லுவிளை பகுதியில் பின்னால் சொகுசு கார் வந்துள்ளது. அந்த கார் முந்தி செல்ல முயன்றது ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அஜில் குமாரிடம் எங்களுக்கு வழி விட மாட்டியா? என கூறி அடித்து உதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் தக்கலை போலீஸ் நிலையத்தில் அஜில்குமார் புகார் செய்தார். புகாரை பெற்றுகொண்டு போலீசார் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com