என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிணமாக கிடந்த முதியவர்
  X

  பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவர்

  ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிணமாக கிடந்த முதியவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  கன்னியாகுமரி:

  ஆசாரிபள்ளம் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடந்தார்.

  உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதியவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனையில் அருகில் உள்ள வார்டு அருகே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

  இது பற்றி மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மேரிபா வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை செய்து வருகிறார்.

  Next Story
  ×