புதுக்கடை அருகே தி.மு.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் - பஸ் டிரைவர் மீது வழக்கு

கோமதி தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கடை அருகே தி.மு.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் - பஸ் டிரைவர் மீது வழக்கு
Published on

கிள்ளியூர் :

புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி (வயது 62). இவர் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று கோமதி அம்சி சிவன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான முருகன் (35) என்பவர் கோமதியை பார்த்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோமதி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com