நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புபலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
நாகர்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குமரி மாவட்டக்குழு சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ரதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் மற்றும் துணைத்தலைவர் ஷாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் பிரவீன், லிபின் ராஜ், சிந்து உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com