வடசேரியில் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்

பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறுவழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடசேரியில் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்
Published on

நாகர்கோவில் : 

நாகர்கோவில் காமரா ஜபுரம் மர்ச்சினிவிளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சகாயஜோஸ் (வயது 24), மினி பஸ் கண்டக்டர்.

இவர் வடசேரி பஸ்நிலை யத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த மற்றொரு மினி பஸ்சின் கண்டக்டர் மற்றும் உரிமையாளர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதுபற்றி வடசேரி போலீசில் சகாய ஜோஸ் புகார் செய்தார். அதில் சம்பவத்தன்று தான் பணியில் இருந்து பயணிகளை ஏற்றிய போது, அங்கு மற்றொரு மினிபஸ்சின் உரிமையாளர் கோவிந்தன், கண்டக்டர் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல் ஆகியோர் வந்தனர்.

அவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல், கொலை மிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com