மார்த்தாண்டத்தில் நாளை மறுநாள் மின்தடை

மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டத்தில் நாளை மறுநாள் மின்தடை
Published on

களியக்காவிளை :

மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் 16-ந்தேதி (திங்கட்கிழமை) மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம் தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com