பூதப்பாண்டி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

பூதப்பாண்டி எட்டாமடை குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கட்டிட தொழிலாளி (வயது 37). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்வராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com