சுதந்திர தின அமுது பெருவிழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கோலப்போட்டி

சுதந்திர தின அமுது பெருவிழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கோலப்போட்டி நடந்தது.
கோலப்போட்டியில் பங்கேற்ற மானவிகள்
கோலப்போட்டியில் பங்கேற்ற மானவிகள்
Published on

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்  சுதந்திர தின அமுது பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மாரத்தான் போட்டி, சைக்கிள் போட்டி, மணல் சிற்ப போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளது. 6-வது நாளான இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த கோலப் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் தொடங்கிவைத்தார். செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கோலப் போட்டியில் பல்வேறு விதமான கண்கவர் கோலங்கள் வரையப் பட்டது. நாளை மறுநாள் 31-ந் தேதி நடைபெறும் நிறைய விழா நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் கேடயங்களையும் வழங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com