கல்லூரி பேராசிரியர் சாவு: உறவினர்- நண்பர்களிடம் போலீஸ் விசாரணை

தனியார் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர் சாவு: உறவினர்- நண்பர்களிடம் போலீஸ் விசாரணை
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிதிஷ் லால்(வயது 28). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து விஜயகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிதிஷ்லாலை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று குழித்துறை ஆற்றில் நிதிஷ் லால் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த நிதிஷ் லால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாயமான கல்லூரி பேராசிரியர் நிதிஷ் லால் ஆற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொ ண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.

அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசார ணையில் நிதிஷ் லால் மாயமா வதற்கு சில நாள்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் பிணமாக கிடந்தார். எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆற்றின் கரையில் இருந்த நிதிஷ் லால் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com