பேச்சிப்பாறை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு - மேல்படிப்புக்கு பெற்றோர் அனுமதிக்காததால் விபரீத முடிவு

நாகர்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு தேர்வு எழுதி உள்ளார்.பேச்சிப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேச்சிப்பாறை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு - மேல்படிப்புக்கு பெற்றோர் அனுமதிக்காததால் விபரீத முடிவு
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மாங்காமலை பகுதியைச் சேர்ந்தவர் மணி.

இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் மோனிஷா (வயது 20), நாகர்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு தேர்வு எழுதி உள்ளார்.

இந்தநிலையில் அவரது தோழிகள் சிலர் சென்னை சென்று அழகுகலை படிப்பு படிக்கத் திட்டமிட்டனர். அவர்களுடன் தானும் சென்று படிக்க மோனிஷா முடிவு செய்தார். இதனை பெற்றோரிடமும் கூறினார்.

ஆனால் அவர்கள் மேல்படிப்பு வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மோனிஷா மன வேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய மோனிஷா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com