மார்த்தாண்டம் அருகே மது விருந்தில் மோதல்; ஒருவர் காயம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைபலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் அருகே பாகோடு மதில்தாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சுனில்குமார் வழக்கு ஒன்றில் குழித்துறை நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்றுள்ளார். இதை கொண்டாடும் விதத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார்.

அப்போது இவருக்கும், பாகோடு மதில் குளத்து விளையைச் சேர்ந்த சேம் (வயது 43) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் முற்றியதையடுத்து சுனில்குமார், சேமை கல்லால் தாக்கி உள்ளார்.

இதில் சேம் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர்.

இது குறித்து சேம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com